குஜராத் தலைநகர் காந்தி நகரில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். சுமார் 9 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள அவர் பதிவான மொத்த வாக்குகளில் 70 சதவீத வாக்குகளை தனதாக்கியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை காட்டிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். பதிவான வாக்குகளீல் 55 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை நிதின் கட்கரி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பீர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை காட்டிலும் மிக அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். சுமார் 6 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள அவர், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.