பாஜகவின் புதிய தலைவர் டிசம்பருக்குள் தேர்வு – அமித்ஷா

பாஜகவின் புதிய தலைவர் வருகிற டிசம்பருக்குள் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித்ஷா, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்தநிலையில், பாஜகவில் ஒரு நபர் ஒரு பதவி என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் புதிய தலைவர் வருகிற டிசம்பருக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவில் செயல் தலைவராக உள்ள ஜே.பி. நட்டா அந்த பதவிக்கு வர கூடும் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version