கர்நாடகாவில் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். இந்நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை பதவி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு தான் ஆதரவு அளிக்கப் போவதாக வந்துள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என குமாரசாமி மறுத்துள்ளார்