பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

இக்கூட்டத்தில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பீகார், உத்ரகாண்ட், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிபூர், திரிபுரா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மஹாராஷ்ட்ரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்தனர். அதேசமயம், தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் கோவாவில் நிலவி வரும் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பாஜக தலைவர்கள் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. குறிப்பாக பிரதமர் மோடி நள்ளிரவு 1.55 மணிக்கு தான் பாஜக தலைமையகத்திலிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Exit mobile version