மக்களவை தேர்தல் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், கிரன் ரிஜிஜு ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், மஹாராஷ்ட்ரா, பீகார்,ஜம்மு காஷ்மீர், ஆந்திரா,கேரளா, அஸ்ஸாம், உத்தரகாண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.