அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 92 இடங்களிலும், அசாம் கண பரிசத் கட்சி 26 இடங்களிலும், ஐக்கிய மக்கள் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 14 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 12 இடங்களிலும் போட்டியிட்டன.
தேர்தலில் பதிவான வாக்குகளில், பாரதிய ஜனதா கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 50 இடங்களை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.