மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தாம் மீண்டும் முதல்வர் ஆவேன் என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் நவம்பரில் நிறைவடைய உள்ளது. அந்த மாநிலத்தில் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதேசமயத்தில், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் கருத்தரங்கில் கலந்து கொண்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தத் தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், மீண்டும் தான் முதலமைச்சராக பதவியேற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version