சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் வழிபாடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்துக்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுவதாகவும் கூறி புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் கிழித்து எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.