சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பா.ஜ.க, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் போராட்டங்களை தடுக்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த கடையடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.