கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளும் கட்சி எதிர் கட்சிக்கிடையே அமளி ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமளியை காரணம் தெரிவித்து சபாநாயகர் கர்நாடக சட்டப்பேரவையை நாளைக்கு ஒத்திவைத்தார். நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளுநரின் அறிவுறுத்தலையும் மீறி சட்டப்பேரவையை சபாநாயகர், வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே முடிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வரும் அவர்கள், எந்நேரமானாலும் சட்டப்பேரவையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று கூறியுள்ளனர். பாஜக எம்.எல்.களின் இந்த முடிவால் கர்நாடக அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.