மகாராஷ்டிரா, அரியானாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. ஹரியானாவிலும் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், (gfx)மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 166 முதல் 194 தொகுதிகள், காங்கிரஸ் 72 முதல் 90 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஹரியானாவிலும் மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ரி-பப்ளிக் டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக 135 லிருந்து 142 தொகுதிகளும், சிவசேனா 81 லிருந்து 88 தொகுதியிலும் காங்கிரஸ் 20 லிருந்து 24 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 30 லிருந்த 35 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக 52 லிருந்து 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 லிருந்து 19 தொகுதிகளிலும், லோக்தள் கட்சி 1 தொகுதியிலும், மக்கள் ஜனநாயக கட்சி 5 லிருந்து 9 தொகுதிகளை கைப்பற்றும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் பாஜக 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக 144 லிருந்து 150 தொகுதிகளிலும், சிவசேனா 44 லிருந்து 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 லிருந்து 50 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 34 லிருந்து 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.