மஹாராஷ்டிராவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக

மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி  வெளியிட்டுள்ளது. 

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருந்தது.

அதே போன்று மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version