மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி., விரேந்திர குமார் நியமனம்

17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி., விரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களவைக்கு 6 முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விரேந்திர குமார் பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர். மத்திய அரசால் தலித் இன மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டார். கடந்த முறை பா.ஜ.க அரசின் மகளிர், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த இவர், நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றவர். இதன்காரணமாக 17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரே புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 19ஆம் தேதி புதிய சபாநாயகரை தேர்வு நடைபெற உள்ளதாக தெரிகிறது.

Exit mobile version