பாஜக எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகா திரும்பும்படி எடியூரப்பா உத்தரவு

அரியானாவின் குருகிராமில் முகாமிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கர்நாடகாவுக்கு திரும்பும்படி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்கள் பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதே வேளையில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முயல்வதாகவும் பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவியை வழங்குவதாக ஆசை காட்டுவதாகவும் பாஜகவின் கர்நாடகா தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அரியானாவின் குருகிராமில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், குருகிராமில் உள்ள எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கர்நாடகா திரும்பும்படி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version