மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 263 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வரும் நிலையில், தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க, உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. 543 தொகுதிகளில், பா.ஜ.க கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி 56 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.