பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம். நாட்டின் 75வது சுதந்திர தினம் 2022 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் நிறைவேற்றப்பட உள்ள 75 திட்டங்கள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாரத மாலா திட்டத்தின் கட்டம் ஒன்று துரிதமாக செயல்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரட்டிப்பாக்கப்படும். கிராமங்கள் மற்றும் நகரங்களில் திறந்தவெளி கழிப்பிட முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதிவேக ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும். குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்யும் முறை, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உறுதிசெய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும். 2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குறுகிய ரயில் பாதைகள் பிராட்கேஜ் பாதைகளாக மாற்றப்படும்.
அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி கொடுக்கப்படும். டிபி நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். 1400 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தி துறையில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்றுமதியை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை வர்த்தகத்தை காப்பாற்றும் வகையில், தேசிய வர்த்தகர்கள் நலவாரியம் மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை உருவாக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஏற்படும் இடர்களை சரிசெய்ய ஓற்றைச் சாளர முறை உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பாரத மாலா திட்டம்
பாரத மாலா திட்டத்தின் கட்டம் ஒன்று துரிதமாக செயல்படுத்தப்படும்
தேசிய நெடுஞ்சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்
திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிப்பு
கிராமங்கள் மற்றும் நகரங்களில் திறந்தவெளி கழிப்பிட முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
அதிவேக ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும்.
குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்யும் முறை, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உறுதிசெய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும்.
2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குறுகிய ரயில் பாதைகள் அகல பாதைகளாக மாற்றப்படும்.
அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி கொடுக்கப்படும்.
காச நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்.
1400 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தி துறையில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதியை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை வர்த்தகத்தை காப்பாற்றும் வகையில், தேசிய வர்த்தகர்கள் நலவாரியம் மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை உருவாக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஏற்படும் இடர்களை சரிசெய்ய ஓற்றைச் சாளர முறை உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.