பாஜக கூட்டணி அமோக வெற்றி: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று காலை முதலே, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஆர்வமுடன் கேட்டறிந்தனர். பாஜக தனிப்பெரும்பான்மையும் ஆட்சியமைக்கும் நிலை உருவானதால் தொண்டர்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. உற்சாகமடைந்த பாஜக தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version