இன்று அல்லது நாளை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்

அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாஜக – 5 தொகுதிகளிலும், பாமக – 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுவார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் தாமரை மலரும் என்றும் மாநிலத்தில் இரட்டை இலை இன்னும் உறுதியாகும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version