கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளைக் கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, வழி நெடுகிலும், திரளான மக்கள் கூடி வரவேற்றனர். இந்த பிரச்சாரத்தின்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version