நடனமாடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பொதுமக்களுடன் நடனமாடி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், தொக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக கட்சி பாடலுக்கு பெண் நடனமாடியதை கண்ட காயத்ரி அவர்களுடன் நடனமாடினார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் அவர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

Exit mobile version