தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் மீது, நேற்று இரவு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், தாக்குதல் சேதமடைந்த பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில், வன்முறையை ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை சவுந்திரராஜன் பேசி வருவதாக கூறினார். பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வன்முறை ஏற்படுத்த முயற்சி வருவதாக பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.