ஒரு லட்சம் கோடி ரூபாயை தரக்கோரி மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வற்புறுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், தேர்தல் செலவுகளுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தரக்கோரி மத்திய அரசு வற்புறுத்துவதாக கூறினார். இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதாகவும் சிதம்பரம் கூறினார்.
வரும் 19-ம் தேதி உர்ஜித் படேல் பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு வேண்டிய நபர்களை ரிசர்வ் வங்கியின் வாரியத்தில் மத்திய அரசு பணி அமர்த்தி இருப்பதாக அவர் புகார் கூறினார். இதன் மூலம் வரும் 19-ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைத்து, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பாஜக அரசு முயல்வதாகவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.