கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கன்னியாகுமரியில் இன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.