தேர்த்தங்கல் பறவைகள் சரணாலத்தில் பறவைகள் வருகை அதிகரிப்பு

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்தச் சரணாலயங்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள், இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன. அக்டோபர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது. இதனால் பறவைகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதையடுத்து பறவைகளின் வருகையை அதிகரிக்க வனத்துறை சார்பில் மழைக்காலத்திற்கு முன்னதாக நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன. இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
 

Exit mobile version