கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 55 காசுகள் வரை சரிந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கோடிக்கணக்கான முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையினை 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலையினை 55 காசுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் முட்டை விலை மேலும் சரியும் என்று கூறப்படுகிறது.