பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பறவைகளின் உயிரிழப்பு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கு வாரம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அந்த அறிக்கையில் தெரிவிக்கவும், மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், மர்மமான முறையில் உயிரிழக்கும் பறவைகளின் மாதிரிகள் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மிருகக் காட்சி சாலைகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க மத்திய சுற்றுச்சூழல்துறை உத்தரவிட்டுள்ளது.