காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் செல்கிறார்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகருக்கு செல்லும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவ உயர் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிவார் எனத் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்தின் ஸ்ரீநகர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.