பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை தொகுப்பு!

எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, அரசியலில் அரும் பணியாற்றி குடியரசுத் தலைவர் பதவி வகித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை தொகுப்பு!

1935 ம் ஆண்டு டிசம்பர் மாதம்11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம், மிரதியில் கமதா கின்கர்- ராஜலட்சுமி தம்பதியின் மகனாக பிறந்தார்.

1957 ஜூலை 13 ம் நாள் எழுத்தாளரும், ஒவியருமான சுவ்ரா முகர்ஜியை மணந்தார். அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்.

1969 ல் இந்திரா காந்தியால் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மாநிலங்களவை உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆண்டுகளில் பதவி வகித்தார்.

1973 ல் தொழில் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில்1982 முதல் 84 வரை இந்தியாவின் இளம் நிதியமைச்சராக பணியாற்றினார்.

ராஜீவ்காந்தி அமைச்சரவையில் இடம் தராததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி1986 ல் ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியை தொடங்கி 89 வரை வழிநடத்தினார்.

24.06.1991 முதல் 15.05.1996 வரை திட்டக்குழுவில் துணைத் தலைவர் பதவி பிரணாப் வகித்தார்

பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் 1995 முதல் 1996 வரையிலும், மன்மோகன்சிங் அமைச்சரவையில் 2006 முதல் 2009 வரையிலும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்

2004 மக்களவைத் தேர்தலில் ஜங்கிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி 22.05.2004 முதல் 26.10.2006 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஜங்கிபூரில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக நிதியமைச்சர் ஆனார்.

2012 ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகி, நாட்டின் 13 வது குடியரசுத் தலைவரானார். 25.07 2012 குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி 25.07.2017 வரை உயரிய பதவியை வகித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை ஜனவரி 2019 ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

உடல்நலக் கோளாறு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரணாப்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31ம் தேதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

 

Exit mobile version