இந்தியா வந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ்

விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம் உள்ளதாகவும், இந்தியாவின் நிதிசேவை மற்றும் மருத்துவதுறையின் செயல்பாடுகள் பாராட்டும் விதத்தில் உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனருமான பில் கேட்ஸ், பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான பணிகளுக்கு நன்கொடை அளித்து வருகிறார். இந்தியாவிலும், தனது அறக்கட்டளை சார்பில் பல்வேறு நல்த்திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். இந்நிலையில், இந்தியா வந்த பில்கேட்ஸ், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, டெல்லியில், நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அடுத்த 10 ஆண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியைஎட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால், கல்வி, சுகாதாரத்துறையில் முன்னேற்றம் காணப்படும் என்றும், தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் அட்டை பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் நிதி சேவைகள் மற்றும் மருத்துவ துறையின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version