தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள போட்டராஜ் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரப்பு அணில் என்பவர் தமது குழந்தை மற்றும் உறவினர் குழந்தைகளை தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் 4 பேரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் மற்றும் அணில் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.