பீகார் மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

பீகார் மாநிலம் வைஷாலி அருகே சஹதாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இன்று  அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் பெட்டிகளில் தடம் புரண்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version