பீகார் – இராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி; தொகுதிகள் பங்கீடு

பீகாரில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுபிரசாத் தலைமையிலான இராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரே அணியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இக்கட்சிகளுக்கிடையே தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிந்தது.

பீகாரில் வரும் 28ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் நடைபெறுகிறது. இலாலுபிரசாத்தின் இராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியானது, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, நேற்று தொகுதிப்பங்கீடு குறித்து முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகளில் மார்க்சிஸ்ட் இலெனினிஸ்ட் 19 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியின் தலைவராக இலாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version