பீகார் அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமை செயலகம், பொது பணித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் நமது நாட்டின் கலச்சாரம் மற்றும் கண்ணியத்துக்கு எதிராக இருக்கிறது. இதனால், அரசு அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் சாதாரண உடையை (Formals Dress) உடுத்தி வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.