போட்றா வெடிய…பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..

தீபாவளிக்கு வெளியாகும் பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.யோகி பாபு, விவேக்,இந்துஜா என நட்சத்திர பட்டாளங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தினை ஏ.ஜி.எஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இடைவெளியீட்டு விழா செப் 19 தேதி நடைப்பெற்றது.இப்படத்திலிருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம், உனக்காக ஆகிய மூன்று பாடல்களுமே மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை வெளியான ட்ரைலர்களின் youtube records-ஐ பிகில் ட்ரைலர் உடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version