'பிகில்' திரைப்படம் பற்றி படக்குழு அறிவித்த புது அப்டேட்..

பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே என்ற பாடல் வரும் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் பிகில்.இது பற்றி எந்த அப்டேட்களும் பட குழுவினர் வெளியிடாமல் வைத்திருந்து தளபதி பிறந்தநாளன்று படத்தின் பெயரை வெளியிட்டனர்.மேலும் படத்தின் மூன்று போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, விவேக் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர்.இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.தற்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் வரும் 23ம் தேதி வெளியாகும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

 

Exit mobile version