இது நிஜமாகவே “வெறித்தனம்”தான் – பிகில் படத்தின் மாஸ் அப்டேட்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, இந்துஜா,யோகிபாயு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் இன்று இரவு 7.30 மணிக்கு தளபதி ரசிகர்களுக்கு 5 வருடத்திற்கு பிறகான ஸ்வீட் சர்ப்ரைஸ் செய்தி இருப்பதாகவும், அது தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்த வெறித்தனமான அறிவிப்பாகவும் இருக்கும் எனவும் அறிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்த ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் நடிகர் விஜய் பிகில் படத்தில் பாடிய “வெறித்தனம்”பாடலின் ரெக்கார்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவும், அதில் செப்டம்பர் 1 மாலை 6 மணிக்கு பாடல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த குரலில் நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version