வாஷிங்டன்னுக்கு அடுத்தபடியான பெரிய உலக வங்கி அலுவலகம் சென்னை

 

 

1,28,000 சதுர அடி பரப்பளவு கொண்ட உலகவங்கியின் சென்னை அலுவலகம்தான் வாஷிங்டன்னுக்கு அடுத்தபடியான பெரிய உலக வங்கி அலுவலகம்.

சென்னை தரமனியில் இயங்கி வரும் இந்த கட்டிடத்தில்தான் 150 நாடுகளுக்கான வணிக,பொருளாதார, நிதி நிர்வாக சேவைகள் நடைபெற்று 2002 ம் ஆண்டு மார்ச் 15 முதல் வருகின்றன.

80 பணியாட்களுடன் 2001 ல் முன்னாள் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா அவர்களால் அண்ணா சாலையில் உள்ள 26000 சதுர அடி ரஹேஜா டவர்ஸ் ல் திறந்து வைக்கப்பட்டது.

2003 ம் ஆண்டு பத்திர மதிப்பீட்டு வேலைகளை வேறுஇடத்திற்கு மாற்ற உலகவங்கி முடிவுசெய்தது. உலகவங்கியின் வரலாற்றில் வாஷிங்டன் டி.சி யை விட்டு வெளியே வந்து செயல்படுவது இதுவே முதன்முறை.

2006 செப்,22 ல் தரமனியில் ஒத்திக்கு ஒரு அலுவலகத்தை எடுத்தது. திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

2009ல் நிரந்தர அலுவலகம் ஏற்படுத்த எண்ணி தரமனியில் ஒத்திக்கு இருந்த இடத்தை விலைக்கு வாங்கிக்கொண்டது.

2012 ல் பணியாளர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்த்தப்பட்டது. இன்று வரையில் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகவங்கியின் நிரந்தர அலுவலகங்களில் மிகப்பெரியது இதுவே.

Exit mobile version