கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சீனாவில் மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் அதிக உயிர் பலி வாங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் அந்நாட்டு அரசு கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது.
இதுவரை கொரோனாவால் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சீனாவில் மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.