மிகப்பெரிய கடத்தல் சுரங்கம் கண்டுபிடிப்பு!

அமெரிக்கா -மெக்சிகோ எல்லையருகே மிகப்பெரிய கடத்தல் சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவு மிக நீளமான போதைப் பொருள் கடத்தல் சுரங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு 2 ஆயிரத்து 966 அடி நீள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 70 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள சுரங்கத்தின் நீளம் 4,309 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 5.5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டுள்ளது. மெக்சிகோவின் திஜுவானா பகுதியிலிருந்து சாண்டியாகோவின் தென்மேற்கு எல்லை வரை நீளும் இச்சுரங்கத்திற்கு அமெரிக்காவில்  வெளியேறும் பகுதி இல்லை.  மேலும் இந்த சுரங்கத்தில் சகல வசதிகளும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version