மறந்து போன கலைகளை மீட்டெடுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

இன்று பிக்பாஸ் வீட்டின் 65 வது நாள்.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.அதனை தொடர்ந்து 2 நாட்களாக பிக்பாஸ் வீடு சற்று சண்டைகள் இல்லாத வீடாக காட்சியளிக்கிறது.நேற்று அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கேள்விகளை கேட்டுக்கொண்டனர்.அதில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் உறுதியாக நான் இறுதிவரை செல்வேன், அதற்கான தகுதி எனக்கு இருக்கிறது என பேசினர்.

இன்றைய பிக்பாஸ் வீடு மீண்டும் இரண்டு கிராமமாக பிரிகிறது.முதல் ப்ரோமோவில் மறந்து போன கலாச்சார கலைகளை போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்க மண்ணில் கலைஞர்கள் இங்கு வருகின்றனர் என சேரன் கூறுகின்றார்.போட்டியாளர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டு அதன் படி செய்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் கவினும், லாஸ்லியாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது வனிதாவோ லாஸ்லியாவிடம் இரண்டு குடும்ப மானமும் கெட்டு போய்டும்,ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும் என கூற , அனைவரும் சிரிக்கின்றனர்.ஏற்கனவே இரண்டு கிராமமாக பிக்பாஸ் வீடு பிரிந்த போது தான், மீரா ஒரு சில குற்றச்சாட்டை சேரன் மீது சொன்னார்.அதே போல் இந்த டாஸ்க்கில் என்ன நடக்க போகிறது என்பதை பொருத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Exit mobile version