பொங்கல் நெருங்கி வரும் நிலையில் தஞ்சையில் மாடுகளுக்கு அலங்காரம் செய்யும் பொருட்களின் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.
தைப் பொங்கலின் அடுத்த நாளான மாட்டுப் பொங்கலின்போது, மாடுகளின் கொம்புகளில் சலங்கை கட்டிவிடுவது, விதவிதமாக அலங்காரம் செய்வது போன்றவற்றில் மாடுகளின் உரிமையாளர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், மாட்டுப் பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மாடுகளை அலங்காரம் செய்வதற்கான பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு போன்றவற்றை மாடு உரிமையாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.