ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் மாவட்டம் வசமாமிடி மலைக்கிராமத்திலுள்ள வனப்பகுதியில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் பச்சிள ஆண் குழந்தை ஒன்று அழுதுக் கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட ஒருவர், குழந்தையை மீட்டு, கிராம மக்கள் உதவியோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன்பு குழந்தையை யாரோ கடுமையாக தாக்கியுள்ளனர் என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர மிருகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.