சைக்கிள் பந்தயத்தின் இமயமாக கருதப்படும் அமெரிக்காவின் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் -ன் பிறந்த தினம் இன்று. இந்த தருணத்தில் அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு
சைக்கிள் பந்தயத்தின் இமயமாக கருதப்பட்டவர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் செப்டம்பர் 18, 1971ஆம் ஆண்டு பிறந்தார். 25 வயதில் புற்றுநோயால் பாதிக்க பட்ட இவர், அதிலிருந்து மீண்டு வந்து, 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் வருடம் வரை, தொடர்ச்சியாக 7 முறை உலக சாம்பியன் பட்டதை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இவரது சாதனைகள் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என அனைவரும் நினைக்க, இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது, சக வீரர் முலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் இவர் பெற்ற 7 உலக கோப்பை பறிக்கப்பட்டதுடன், வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
குற்றசாட்டுகளுக்கு சில ஆண்டுகள் மறுப்பும், மவுனமும் சாதித்து வந்த ஆம்ஸ்ட்ராங். ஒபரே என்ற பெண்மணியால் நடத்தப்படும் தொலைகாட்சி பேட்டியில் உண்மையை ஒப்பு கொண்டுள்ளளார்.
இந்த விவாகரத்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் புகழை இழந்து விட்டதாகவும், இது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம் என்றும் அந்த பேட்டியின் போது அவர் கூறினார். பெரும் துயரத்தில் இருந்து சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அளித்த அதே லான்ஸ், குறுக்கு வழியை தேர்வு செய்தபோது, வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் நமக்கெல்லாம் ஒரு பாடம்…