பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருபது கோடியே ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பில் நடைபெறவுள்ள விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது
அதிமுக மக்களவை உறுப்பினர் மருதராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தனர். ஏற்கனவே இருபது கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.