நீர்மட்டம் 90 அடியை எட்டிய பவானிசாகர் அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், பவானிசாகர் அணை ஓராண்டுக்குப்பின் மீண்டும் 90 அடியை எட்டியதுள்ளது.

மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-ஆவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின், மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில், ஓராண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது.

Exit mobile version