ராமநாதபுரத்தில் நாட்டியாலயா பள்ளியின் சார்பில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வை, ஏராளமான நாட்டியார்வலர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் பாராம்பரிய நடனமாக பரதம் விளங்கிவருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பரதக்கலையை ஏராளமான பெண்கள் அதை கற்று வருவதாக தெரிகிறது. இதனிடையே ராமநாதபுரத்தில் பயின்ற நாட்டியப்பள்ளி மாணவிகள், பரதநாட்டியம் கற்ற ஏராளமான அறிஞர்கள் முன்னிலையில் நடனத்தை அரங்கேற்றம் செய்தனர். இதனையொட்டி ஏராளமான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு, மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை கண்டு ரசித்தனர்.