தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் 99-வது பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய தலைவர்கள் செயல்பட்டதை விட சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்த பாரதிராஜா, நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
Discussion about this post