Covaxin : 77.8% செயல்திறன் உறுதி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

பாரத் பயோடெக்கில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்ஸின் தடுப்பூசியின் தன்மை மற்றும் யார் செலுத்திக்கொள்ளலாம் என்பது பற்றி அந்த நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கோவாக்ஸின் தடுப்பூசி என்பது கொரோனா தொற்றை தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு அவசர கால தடுப்பு மருந்து என்றும் இதற்கு மத்திய உரிமம் வழங்கும் நிறுவனத்திடமிருந்து அதனை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளதா ? கர்ப்பிணி பெண்களா ? ரத்த கசிவு பிரச்சனை இருக்கிறதா ? காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா ? ஏற்கனவே வேறு ஏதேனும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பது பற்றி தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே அந்த நிறுவனம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கோவாக்ஸின் தடுப்பூசி மூன்று கட்டங்களாக மக்கள் மீது பரிசோதனை செய்ததில் 77.8% நோய் தடுப்பு திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவாக் தடுப்பூசி தீவிர கொரோனா தொற்றிலிருந்து குணமடைய 93.4% திறன் உடையது என்றும், பரிசோதனையின் அடிப்படையில் அறிகுறி இல்லாத கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 63.6% பாதுகாப்பு வழங்கும். மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று எதிராக 65.2% செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version