முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தார். இதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்க உள்ளார். இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் உட்பட இதுவரை மொத்தம் 45 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version