தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரை எதிர்த்து பாக்யாராஜ் போட்டியிடுகிறார்.
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், எதிரணி சார்பாக தலைவர் பதவிக்கு இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு நடிகர் உதயாவும், நடிகை குட்டி பத்மினியும் போட்டியிடுகின்றனர். கடந்த முறை தேர்தலின் போது, விஷாலின் பக்கம் இருந்த நடிகர் உதயாவும், நடிகை குட்டி பத்மினியும், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது எதிரணியில் போட்டியிடுவது திரைத்துறையினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.